
தமிழகம்
50 ஆண்டுகளில் முதல்முறை… முட்டை விலை கடும் உயர்வு!
50 ஆண்டுகளாக கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை முதல்முறையாக ரூ 5.35 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் தற்போது முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லில் ஒரு முட்டையின் விலை நேற்று பண்ணை விலையில் ரூ.5.20 காசுகளில் இருந்து 15 காசுகள் உயர்த்தி ரூ. 5.35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நேற்று இரவு அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு நாளை காலை முதல் அமலுக்கு வருகிறது. முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இருப்பினும் பிற மண்டலங்களில் முட்டை விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் தற்போது இதன் விலை உயர்வுக்கு காரணம் என கூறுகிறார்கள் பண்ணை உரிமையாளர்கள்.
இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் நாள்தோறும் உற்பத்தியாகும் 5 கோடி முட்டைகளை கேரள மாநிலம் மற்றும் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும் போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிறப்பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபடுவது குறிப்பிடத்தக்கது.
