நாமக்கல்லில் முட்டை விலை மேலும் உயர்வு: எவ்வளவு தெரியுமா ?

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் அச்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலையினை தொடர்ந்து மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

இந்த சூழலில் நாமக்கல்லில் முட்டையின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.4.80 ஆக அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

அப்போது முட்டை பண்ணையாளர்களின் உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு நடைபெற்றது. இந்நிலையில் முட்டையின் விலையும் உயர்த்தப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே முட்டையின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ. 4.80 ஆக இருக்க நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் சென்னையில் முட்டை விலை ரூ.5.05 காசுகளாக விற்கப்படுகிறது.

மேலும், கறிக்கோழி (உயிருடன்) விலை ரூ.5 அதிகரித்து ரூ.116க்கும், முட்டைக் கோழி கிலோவிற்கு ரூ, 95 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment