News
முட்டை விலை தொடர்ந்து வீழ்ச்சி: பறவை காய்ச்சல் எதிரொலியா?
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் பரவி வந்த பறவை காய்ச்சல் தமிழகத்திலும் எட்டிப் பார்த்து வருவதாக அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக முட்டை விலை கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து வந்தது
இந்த நிலையில் நாமக்கல் முட்டை விலை நேற்று ஒரே நாளில் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 05 காசு என்ற நிலையில் தற்போது விற்பனையாகி வருகிறது. பறவை காய்ச்சல் காரணமாகத் தான் முட்டை விலை நாள்தோறும் குறைந்து வருவதாகவும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இதுகுறித்து கூறிய போது தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் நோய் அறிகுறியை இல்லை என்றும் இந்த நோயின் அறிகுறி தாக்கம் இல்லாத போதும் பிற மாநிலங்களில் இந்த நோய் தாக்கி உள்ளதால் அந்த அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் முட்டை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் இதன் காரணமாக விலை குறைந்து கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்
பறவைக்காய்ச்சல் எதிரொலியால் முட்டை விலை தொடர்ந்து குறைந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
