முட்டையின் மொத்த விற்பனை விலையை நிர்ணயிக்கும் அமைப்பான தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 10 காசுகள் உயர்த்தியுள்ளது.
என்.இ.சி.சி., மண்டல தலைவர் பி.செல்வராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை விலை ரூ.4.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முட்டை விலை ரூ.5.65 ஆக இருந்தது. கடந்த ஏப்ரல் 12ம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இருப்பினும், வியாபாரிகள் கோழிப்பண்ணையாளர்களிடமிருந்து ஒரு முட்டைக்கு ₹4.10 க்கு முட்டைகளை வாங்குகின்றனர் (NECC விலையில் இருந்து 30 பைசா தள்ளுபடி).
இந்த முட்டைகளின் கொள்முதல் விலை தட்பவெப்ப நிலை, பண்டிகை கால தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
லஞ்சம் வாங்கிய VAO மற்றும் கிராம உதவியாளர் கைது !
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. நாட்டிலேயே அதிக அளவில் முட்டை உற்பத்தி செய்யும் மண்டலமாக அறியப்படும் நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டைகள் பெருமளவில் சப்ளை செய்யப்படுகிறது. நாமக்கல்லில் உற்பத்தியாகும் முட்டைகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.