ஈமு கோழி மோசடி வழக்கு- 9 ஆண்டுகளாக குஜராத்தில் பதுங்கி இருந்த தொழிலதிபர் கைது!

கடந்த 2012ம் ஆண்டு வரை ஈமு கோழி விவகாரம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஈரோடு, பெருந்துறை உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிலர் பல மாவட்ட மக்களிடம் ஈமு கோழி விற்று மோசடி செய்ததாக தொடர் புகார் எழுந்தது.

இது தொடர்பான விளம்பரங்களில் நடித்த நடிகர் சத்யராஜ்  உள்ளிட்ட நடிகர்கள் மீதும் விமர்சனம் எழுந்தது. ஈமு கோழி குழப்பங்களால் பலர் ஊரை விட்டு ஓட்டம் பிடித்து தலைமறைவாகினர்.

இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த செல்வக்குமார் என்பவரும் ஈமு கோழி மோசடி வழக்கில் தலைமறைவானார்.

இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தலைமறைவான செல்வக்குமார் கடந்த 9 வருடங்களாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் பதுங்கி இருந்துள்ளார்.

நேற்று காலை சென்னிமலை வருவதாக அவர் இருந்ததை அறிந்த போலீசார் அவரை தேடி சென்று கைது செய்தனர்.

ஈமு கோழி வழக்கில் 9 வருடங்களாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கும் விசயமாக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment