பொங்கல் சீர்… தியேட்டர் ஊழியர்களை கௌரவப்படுத்திய ஈஸ்வரன்!

1b36fec21315ba4880186add95d22ce9

வெண்ணிலா கபடிக்குழு, நான்‌ மகான்‌ அல்ல, பாண்டிய நாடு மற்றும்‌ பல படங்களை இயக்கியவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் சுசீந்திரன்‌. இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம்  ‘ஈஸ்வரன்’. 

தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நேற்று பொங்கல்‌ அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்‌ கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜீரோ, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் போன்ற படங்களை தயாரித்த மாதவ் மீடியா இந்த படத்தை தயாரித்திருந்தனர். 

இன்னிலையில் பொங்கலை முன்னிட்டு தியேட்டர் ஊழியர்களுக்கு மாதவ் மீடியா சார்பில் ஈஸ்வரன் பொங்கல் சீர்வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கூறும்போது “கடந்த வருடம் தியேட்டர்களுக்கு மிகவும் கடினமான ஒரு வருடம். எங்களுக்கு தூண்களாக இருக்கும் தியேட்டர் ஊழியர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். 

இந்நிலையில் தியேட்டர் ஊழியர்களை மரியாதை படுத்தும் வகையில் அவர்களுக்கு ஈஸ்வரன்பொங்கல் சீர் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர். இந்த செயல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.