செய்திகள்
“மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற முடியாது”-எடியூரப்பா!
தற்போது இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் புதிய முதல்வர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதுவும் குறிப்பாக தற்போது பஞ்சாபில் புதிய முதல்வர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இதற்கு முன்பு குஜராத் மாநிலத்தில் முதல்வர் ராஜினாமா செய்ததை அடுத்து வேறொருவர் முதல்வராக பொறுப்பேற்றார். அதேபோல்தான் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்த பின்னர் மற்றொருவர் முதல்வராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான எடியூரப்பாவிடம் மோடி அலை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் கூறிய பதில் மிகவும் பரபரப்பை உண்டாக்கியது. அதன்படி மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். கர்நாடக தேர்தலில் மோடி அலையால் மட்டுமே பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற பெற்றுவிட முடியாது என்றும் எடியூரப்பா கூறியுள்ளார். மேலும் ஹங்கல், சிந்த்கி தொகுதியில் இடைத் தேர்தலில் வென்று பாஜக தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய நேரம் இது என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.
மோடி பெயரை சொல்லி அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற மாயையில் இருந்துவிடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மோடி அலையில் மக்களவைத் தேர்தலில் வேண்டுமானால் வெற்றி பெறலாம், ஆனால் மாநில தேர்தலில் அது நடக்காது என்றும் எடியூரப்பா கூறியுள்ளார். வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்து கர்நாடக மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும் என்றும் எடியூரப்பா கோரிக்கை வைத்துள்ளார். இதனால் மோடி குறித்த கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கருத்தால் பரபரப்பு நிகழ்ந்துள்ளது.
