Connect with us

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் குறைந்துள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு!!

அண்ணாமலை

தமிழகம்

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் குறைந்துள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு!!

தமிழக அரசின் கல்வி தரம் குறைந்து இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அவர் தென்னிந்திய அளவில் மிகவும் குறைவான மதிப்பெண் பெற்ற மாநிலமாக தமிழகம் விளங்குகிறது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மௌனம் காத்து வருவதாக கூறினார்.

இதனையடுத்து மற்ற மாநிலங்களான தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் முன்னிலை வகிப்பது போல் தமிழகம் விளங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் இன்று வரையில் எடுக்கவில்லை என கூறினார்.

அதே போல் சென்னையில் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற அகிலாண்டேஸ்வரி என்ற மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.

இதனை தொடர்ந்து மாணவியில் மருத்துவ படிப்பிற்கு தேவையான அனைத்து கல்வி செலவையும் கட்சியின் சார்பாக பார்த்து கொள்வதாக கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top