பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ஆயுத பூஜைக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையாக வியாழன் மற்றும் வெள்ளி கிழமை விடுமுறை என்றும் சனிக்கிழமை பள்ளி இயங்கும் என்றும் தகவல்கள் வெளியாகின

இந்த நிலையில் ஆசிரியர் சங்கம் வரும் சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக இந்த முடிவை விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தது.

இந்த வேண்டுகோளின் அடிப்படையில் தற்போது வியாழன் வெள்ளி சனி ஞாயிறு என நான்கு நாட்கள் பள்ளிகள் விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment