எண்ணும் எழுத்தும் திட்டம்! மாணவர்களுக்கு கல்வித்துறை உத்தரவு!!

தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் செயல்படும் 1 முதல் 5 ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கொரோனோ காலத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக கற்றல் வாய்ப்புகளை மாணவர்கள் இழந்ததாக கூறப்படுகிறது.

இதனை மீண்டும் ஈடு கட்ட தொடக்கக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அதன் படி, வருகின்ற 19ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை கூறியுள்ளது.

இதனிடையே மாணவர்களுக்கு குறிப்பிட்ட பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment