’சூரரை போற்று’ படத்திற்கு ஆஸ்கார் கிடைக்குமா? ஒரு ஆச்சரியமான தகவல்!

 

சமீபத்தில் ஓடிடியில் வெளியான சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் ஒரு சில எதிர்மறை விமர்சனங்கள் வந்தது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் தாறுமாறாக இருந்தது என்றும் ஓடிடி நிறுவனத்திற்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மிகப்பெரிய லாபம் கிடைத்ததாகவும் கூறப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை அடுத்துதான் பல திரைப்படங்கள் ஓடிடி பக்கம் சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது 

soorarai


இந்த நிலையில் தற்போது சூரரைப்போற்று படக்குழுவினர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட ஒரு சில பிரிவுகளுக்கு இந்த படம் செல்ல உள்ளதாகவும் படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்த தனது சந்தோஷத்தை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர். ரஹ்மானை அடுத்த இன்னும் எந்த ஒரு இந்தியயருக்கும் ஆஸ்கார் விருது கிடைக்காத நிலையில் அந்த குறையை சூரரைப்போற்று போக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


 

From around the web