மத்திய அரசுத் துறையில் எண்ணற்ற வேலை

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், தபால் உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டாப் செலக்சன் கமிஷன் மூலம் இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழ்நிலை உதவியாளர் மற்றும் இளநிலை செயலக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் ரூ.5200 முதல் ரூ.20200 வரை ஆகும். அஞ்சல் உதவியாளர் மற்றும் வரிசையாக்க உதவியாளர் பணிக்கு
 
மத்திய அரசுத் துறையில் எண்ணற்ற வேலை

      மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள  அலுவலக உதவியாளர், தபால் உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  ஸ்டாப் செலக்சன் கமிஷன் மூலம் இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

கீழ்நிலை உதவியாளர் மற்றும் இளநிலை செயலக உதவியாளர்  பணிக்கு ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் ரூ.5200 முதல் ரூ.20200 வரை ஆகும்.

அஞ்சல் உதவியாளர் மற்றும் வரிசையாக்க உதவியாளர்  பணிக்கு ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் ரூ.5200 முதல் ரூ.20200 வரை ஆகும்.

மத்திய அரசுத் துறையில் எண்ணற்ற வேலை

 டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், கிரேடு ஏ  பணிக்கு ஆட்கள் தேவை. மாத சம்பளம் ரூ.5200 முதல் ரூ.20200 வரை ஆகும். பிளஸ் டு  தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதானது 01.08.2019 தேதியின்போது 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.  கணினித் தேர்வு, தட்டச்சு தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100 அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண்கள், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்கும் முறையானது  https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் பார்ட் 1, பார்ட் 2 என இருநிலைகளில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை  2 பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும். கணினி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி அதாவது முதல்நிலை தேர்வு : 01.06.2019 முதல் 26.06.2019 வரை நடைபெற உள்ளது. இரண்டாம் நிலை தேர்வு 29.09.2019 நடைபெறுகிறது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 05.04.2019 மேலும் விபரங்களை அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles /notice_chsl_05032019.pdfஎன்ற லிங்கில் தெரிந்துக் கொள்ளலாம்.

From around the web