நீதிமன்றத்தில் 100 க்கும் மேற்பட்ட வேலை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக் காவலர் உள்ளிட்ட 100 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: பணி அலுவலக உதவியாளர் பிரிவில் 48 பணியிடங்களும், கணினி இயக்குபவர் பிரிவில் 07 பணியிடங்களும், இரவு நேரக் காப்பாளர் பிரிவில் 10 பணியிடங்களும், ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் பிரிவில் 13 பணியிடங்களும், ஒட்டுநர் பிரிவில் 02 பணியிடங்களும், துப்புரவுப் பணியாளர் பிரிவில் 05 பணியிடங்களும், மசால்ஜி பிரிவில் 15
 
நீதிமன்றத்தில்100க்கும் மேற்பட்ட வேலை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக் காவலர் உள்ளிட்ட 100 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் 100 க்கும் மேற்பட்ட  வேலை

காலிப் பணியிடங்கள்:

பணி அலுவலக உதவியாளர் பிரிவில் 48 பணியிடங்களும், கணினி இயக்குபவர் பிரிவில் 07 பணியிடங்களும், இரவு நேரக் காப்பாளர் பிரிவில் 10 பணியிடங்களும், ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் பிரிவில் 13 பணியிடங்களும், ஒட்டுநர் பிரிவில் 02 பணியிடங்களும், துப்புரவுப் பணியாளர் பிரிவில் 05 பணியிடங்களும், மசால்ஜி பிரிவில் 15 பணியிடங்களூம் இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் பிரிவில் 10 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள், தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

பணி அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு ரூ.15,700 முதல் 50,000 வரை வழங்கப்படும். கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு ரூ.20,600 முதல் 65,500 வரை வழங்கப்படும்.  இரவு நேரக் காப்பாளர், ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் பணியிடத்திற்கும் ரூ.16,600 முதல் 52,400  வரை வழங்கப்படும். ஒட்டுநர் பணியிடத்திற்கு ரூ.19,500 முதல் 62,000 வரை வழங்கப்படும். துப்புரவுப் பணியாளர், மசால்ஜி பணியிடத்திற்கு ரூ.15,700 முதல் 50,000 வரை வழங்கப்படும். இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் பணியிடத்திற்கு ரூ.15,700 முதல் 62,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விவரம்:

https://districts.ecourts.gov.in/tiruvallur   என்னும் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள்,

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,

திருவள்ளூர் மாவட்டம் – 637 003

மேலும் முழுமையான விவரங்களை அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment-Notification%202019-Tiruvallur_0.pdf என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2019

From around the web