எஸ்பிஐ வங்கியில் 2000 பேருக்கு வேலை

மத்திய அரசின் பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) புரோபேஷனரி அதிகாரியாக பணிபுரிய 2000 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள்: புரோபேஷனரி அதிகாரியாக பணிபுரிய 2,000 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: புரோபேஷனரி அதிகாரி பணியிடத்திற்கு ஏதாவது ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: புரோபேஷனரி அதிகாரி பணிபுரிய 21 வயது முதல் 30
 
எஸ்பிஐ வங்கியில் 2000 பேருக்கு வேலை

மத்திய அரசின் பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) புரோபேஷனரி அதிகாரியாக பணிபுரிய  2000 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எஸ்பிஐ வங்கியில் 2000 பேருக்கு வேலை

காலிப்பணியிடங்கள்:

புரோபேஷனரி அதிகாரியாக பணிபுரிய 2,000 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

புரோபேஷனரி அதிகாரி பணியிடத்திற்கு ஏதாவது ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

புரோபேஷனரி அதிகாரி  பணிபுரிய 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

பிரிமிலினரி தேர்வு, மெயின் தேர்வு, கலந்துரையாடல் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமானது பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750 எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு  ரூ. 125 ஆகும்.

விவரம்:

விண்ணப்பிக்கும் முறையானது ஆன்லைன் https://ibpsonline.ibps.in/sbiposmar19/ என்னும் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விபரங்களை அறிய www.sbi.co.in அல்லது https://www.sbi.co.in/webfiles/uploads/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO%202019.pdf  என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி : 02/04/2019

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22/04/2019

From around the web