ரூ.1.19 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை

தமிழக அரசின் மருத்துவ சேவை மற்றும் மருத்துவ சார்நிலை பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: டிரக் இன்ஸ்பெக்டர் (Drugs Inspector) பிரிவில் 40 பணியிடங்களும், ஜூனியர் ஆய்வாளர் (Junior Analyst in the Drugs Testing Laboratory) பிரிவில் 09 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: டிரக் இன்ஸ்பெக்டர் (Drugs Inspector) பணியிடங்களுக்கு பார்மஸி, பாராமெடிக்கல் மற்றும் மைக்ரோ பயோலாஜி இதில் ஏதாவதொரு பிரிவில்
 
ரூ.1.19 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை

தமிழக அரசின் மருத்துவ சேவை மற்றும் மருத்துவ சார்நிலை பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரூ.1.19 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை

காலிப் பணியிடங்கள்:

டிரக் இன்ஸ்பெக்டர் (Drugs Inspector) பிரிவில் 40 பணியிடங்களும், ஜூனியர் ஆய்வாளர் (Junior Analyst in the Drugs Testing Laboratory) பிரிவில் 09 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

டிரக் இன்ஸ்பெக்டர் (Drugs Inspector) பணியிடங்களுக்கு பார்மஸி, பாராமெடிக்கல் மற்றும் மைக்ரோ பயோலாஜி இதில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். ஜூனியர் ஆய்வாளர் (Junior Analyst in the Drugs Testing Laboratory) பணியிடங்களுக்கு பார்மஸி, பாராமெடிக்கல் கெமிஸ்ட்ரி மற்றும் கெமிஸ்ட்ரி இதில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இரண்டு பணியிடங்களுக்கும் 18 வயது முதல் 48 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

டிரக் இன்ஸ்பெக்டர் (Drugs Inspector) பணியிடங்களுக்கு ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். ஜூனியர் ஆய்வாளர் (Junior Analyst in the Drugs Testing Laboratory) பணியிடங்களுக்கு ரூ.36,400 முதல் 1,15,700 வரை வழங்கப்படும்.

பணி அனுபவம்:

இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

ஒரு முறை பதிவுக்கட்டணம் ரூ.150 மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ.200 மொத்தம் ரூ.350 விண்ணப்பக் கட்டணம் ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.tnspc.gov.in, www.tnpscexams.net  மற்றும்  www.tnspcexams.in  என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_15_notifn_DrugsInspector_JuniorAnalyst.pdf என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.05.2019

From around the web