பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIPET) காலியாக உள்ள மூத்த தொழில்நுட்ப அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி, விஞ்ஞானி மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் : மூத்த தொழில்நுட்ப அதிகாரி பிரிவில் 07 பணியிடங்களும், தொழில்நுட்ப அதிகாரி பிரிவில் 06 பணியிடங்களும், விஞ்ஞானி பிரிவில் 06 பணியிடங்களும், மேலாளர் பிரிவில் 02 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: மூத்த தொழில்நுட்ப அதிகாரி மற்றும் தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களுக்கு M.E அல்லது
 
பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின்  பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIPET) காலியாக உள்ள மூத்த தொழில்நுட்ப அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி, விஞ்ஞானி மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

மூத்த தொழில்நுட்ப அதிகாரி பிரிவில் 07 பணியிடங்களும், தொழில்நுட்ப அதிகாரி பிரிவில் 06 பணியிடங்களும்,  விஞ்ஞானி பிரிவில் 06 பணியிடங்களும், மேலாளர் பிரிவில் 02 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

மூத்த தொழில்நுட்ப அதிகாரி மற்றும் தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களுக்கு  M.E அல்லது M.Tech  ஏதாவதொரு படிப்பு முடித்து இருக்க வேண்டும்.  விஞ்ஞானி பணியிடங்களுக்கு M.Tech அல்லது M.Ed Tech  ஏதாவதொரு படிப்பு முடித்து இருக்க வேண்டும்.  மேலாளர் பணியிடங்களுக்கு  MBA  படித்து இருக்க வேண்டும்.

ஊதியம்:

மூத்த தொழில்நுட்ப அதிகாரி மற்றும் விஞ்ஞானி பணியிடங்களுக்கு  ரூ.67,700 வரை வழங்கப்படும். தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களுக்கு ரூ. 56,100 வரை வழங்கப்படும். மேலாளர் பணியிடங்களுக்கு ரூ. 78,800 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

மூத்த தொழில்நுட்ப அதிகாரி மற்றும் விஞ்ஞானி பணியிடங்களுக்கு  40 வயதிற்குள் இருக்க வேண்டும். தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலாளர் பணியிடங்களுக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.cipet.gov.in  என்ற இணையதளத்தின்  மூலம் விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து கீழ் உள்ள  முகவரிக்கு அனுப்பவும்.

Director (Administration),

CIPET Head Office,

T.V.K. Industrial Estate, Guindy,

Chennai – 600 032.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-04-2019 

From around the web