கிளைச் சிறைகளில் வேலை

கிளைச் சிறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: காஞ்சிபுரம் மாவட்டம் புழல் மத்திய சிறை 1-இன் கட்டுப்பாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுராந்தகம் கிளைச் சிறைகள் உள்ளன. இதில், காலியாக உள்ள சமையலர் (ஆண்), செவிலி உதவியாளர், துப்புரவுப் பணியாளர் பிரிவில் காலிப் பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: சமையலர் மற்றும் செவிலி உதவியாளர் பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமையல் பணியில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க
 
கிளைச் சிறைகளில் வேலை

கிளைச் சிறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கிளைச் சிறைகளில் வேலை

காலிப் பணியிடங்கள்:

காஞ்சிபுரம் மாவட்டம் புழல் மத்திய சிறை 1-இன் கட்டுப்பாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுராந்தகம் கிளைச் சிறைகள் உள்ளன. இதில், காலியாக உள்ள சமையலர் (ஆண்), செவிலி உதவியாளர், துப்புரவுப் பணியாளர்  பிரிவில் காலிப் பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

சமையலர் மற்றும் செவிலி உதவியாளர் பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமையல் பணியில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். துப்புரவுப் பணியிடத்துக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயதும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32 வயதும், பொதுப் பிரிவினருக்கு (ஓ.சி.) 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

சமையலர், செவிலி உதவியாளர் பணியிடத்துக்கு ரூ.15,900 முதல் 50,400 வரை, துப்புரவுப் பணியிடத்துக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 என்ற அடிப்படையிலும் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

சிறைக் கண்காணிப்பாளர், மத்திய சிறை-1 (தண்டனை), புழல், சென்னை-66

     விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய தேதி: 15.05.2019

From around the web