ரூ.1,60,000 ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: Engineer Trainee பிரிவில் 100 பணியிடங்களும், Executive Trainee (HR/Finance) பிரிவில் 45 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: Engineer Trainee பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல் பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் படித்து முடித்திருக்க வேண்டும். Executive Trainee (HR/Finance) பணியிடங்களுக்கு அதாவது Executive Trainee (HR) பணிக்கு Human Resource Management,
 
ரூ.1,60,000 ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான BHEL  நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.1,60,000 ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Engineer Trainee பிரிவில் 100 பணியிடங்களும், Executive Trainee (HR/Finance) பிரிவில் 45 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

Engineer Trainee பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல் பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் படித்து முடித்திருக்க வேண்டும். Executive Trainee (HR/Finance) பணியிடங்களுக்கு அதாவது Executive Trainee (HR) பணிக்கு  Human Resource Management, Personnel Management, Industrial Relations, Social Work, Business Administration துறைகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Executive Trainee (Finance) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் CA, CWA, CMA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

29 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.800 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலம் www.careers.bhel.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

      எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:  25.05.2019 –  26.05.2019

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.05.2019

From around the web