எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை

முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: ரிலேசன்ஷிப் மேனேஜர் பிரிவில் 506 பணியிடங்களும், கஸ்டமர் ரிலேசன்ஷிப் எக்சிகியூடிவ் பிரிவில் 66 பணியிடங்களும், பேங்க் மெடிக்கல் ஆபிசர் பிரிவில் 56 பணியிடங்களும் உள்ளன. கல்வித்தகுதி: பணியிடங்களுக்கு ஏற்ற வகையில் அந்தந்த துறையில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ., எம்.பி.பி.எஸ் மற்றும் சி.ஏ போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்புகளில் பயின்று
 
எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை

முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை

காலிப்பணியிடங்கள்:

ரிலேசன்ஷிப் மேனேஜர் பிரிவில் 506 பணியிடங்களும், கஸ்டமர் ரிலேசன்ஷிப் எக்சிகியூடிவ் பிரிவில் 66 பணியிடங்களும், பேங்க் மெடிக்கல் ஆபிசர் பிரிவில் 56 பணியிடங்களும் உள்ளன.

கல்வித்தகுதி:

பணியிடங்களுக்கு ஏற்ற வகையில் அந்தந்த துறையில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ.,  எம்.பி.பி.எஸ் மற்றும்  சி.ஏ போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்புகளில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அதுமட்டுமல்லாமல் அத்துறை சார்ந்த முன்அனுபவம் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

ரிலேசன்ஷிப் மேனேஜர் பணியிடங்களுக்கு 23 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ.16,666 முதல் ரூ.8,30,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:


பொது  மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ.750 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ,125 ஆகும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.  மேலும்   முழுமையான விவரங்களை அறிய
https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/22052019_WEALTH%20MGT.pdf  மற்றும் 
https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/20052019_ADVT%20CRPD-SCO-2019-20-07%20BMO%20&%20%20Others.pdf  என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.06.2019

From around the web