விழுப்புரம் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை!

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு நகர வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி கூட்டுறவு நகர வங்கியில் 22 உதவியாளர் பணியிடங்களும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 21 உதவியாளர்/எழுத்தர் பணியிங்களும் காலியாக உள்ளன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். பள்ளியில் அல்லது பட்டப்படிப்பின் போது
 

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு நகர வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

விழுப்புரம் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை!

அதன்படி கூட்டுறவு நகர வங்கியில் 22 உதவியாளர் பணியிடங்களும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 21 உதவியாளர்/எழுத்தர் பணியிங்களும் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

பள்ளியில் அல்லது பட்டப்படிப்பின் போது தமிழை ஒரு பாடமாக படித்துத் தேர்வு பெற்றிருக்க வேண்டும்.

அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். இரண்டு தேர்வுகளிலும் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்து விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். முழு அறிவிப்பிற்கான இணைப்பு: http://www.vpmdrb.in/doc_pdf/Notification_1.pdf

விண்ணப்பிக்க கடைசி நாள் 23.09.2019 மாலை 5.45 வரை ஆகும்.

எழுத்துத் தேர்வு 20.10.2019 அன்று நடைபெறும்.

From around the web