கரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப் பணியிடம்!! 
 
கரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள  அலுவலக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் காலிப் பணியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
அலுவலக உதவியாளர் – 10
பதிவறை எழுத்தர் – 03

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கானது வயது வரம்பு 18 முதல் 35 க்குள் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
அலுவலக உதவியாளர் – ரூ.15,700 to ரூ.50,000
பதிவறை எழுத்தர் – ரூ.15,900 to ரூ.50,400

கல்வித்தகுதி :
அலுவலக உதவியாளருக்கு விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதிவறை எழுத்தருக்கு விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
1.     நேர்முகத்தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
தாந்தோணி ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 10.02.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். 

From around the web