மத்திய அரசு துறைகளில் அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசு துறைகளில் அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : Data Processing Assistant : 02 காலிப்பணியிடம் Deputy Central Intelligence Officer (Technical) : 27 காலிப்பணியிடம் சம்பளம் : 7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும். கல்வித் தகுதி : Data Processing Assistant : Computer Application,
 
UPSC assistant officer job recruitment

மத்திய அரசு துறைகளில் அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு துறைகளில் அதிகாரிகள்  மற்றும் உதவியாளர்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடங்கள் :

Data Processing Assistant : 02 காலிப்பணியிடம்
Deputy Central Intelligence Officer (Technical) : 27 காலிப்பணியிடம்

சம்பளம் : 7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.

கல்வித் தகுதி :

Data Processing Assistant : Computer Application, Information Technology, Computer Science போன்ற துறைகளில் ஏதாவது ஒரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவ்ர்கள் அல்லது மேற்கண்ட துறைகளில் பி.இ. அல்லது பி.டெக் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Deputy Central Intelligence Officer (Technical) : எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக் மற்றும் டெலி கம்யூனிகேஷன், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல், மென்பொருள் பொறியியல் போன்ற துறைகளில் ஏதாவது ஒரு துறையில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றவர்கள் அல்லது எம்.சி.ஏ., எம்.எஸ்.சி. பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

Data Processing Assistant : 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
Deputy Central Intelligence Officer (Technical) : 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

எஸ்.சி., எஸ்.டி, மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ. 25 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் http://www.upsconline.nic.in/ மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=MjE4DAAAKZOAIFSADXLK6QPXU9CINX2HCSCLCWXKQ7AMVIGNJI5CY1 பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.01.2020

From around the web