ரூ. 14,000/- சம்பளத்தில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
ஆற்றுப்படுத்துநர் : 01 காலிப்பணியிடம்
சம்பளம் :
தொகுப்பூதியமாக மாதம் ஒன்றிற்கு ரூ. 14,000/- வழங்கப்படும்
கல்வித் தகுதி :
உளவியலாளர் / சமூகப்பணி / சமூகவியல்களில் / வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் இவற்றில் எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அனுபவம் :
குழந்தை சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
பொது பிரிவினர் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை :
நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2021/01/2021012534.pdf விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் நகல் எடுத்து சுயசான்றொப்பம் இட்டு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2021/01/2021012534.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.02.2021