8ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ. 15,700 சம்பளத்தில் சென்னை, தலைமை செயலகத்தில் அலுவலக உதவியாளர் வேலை

சென்னை, தலைமைச் செயலகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
அலுவலக உதவியாளர் : 12 காலிப்பணியிடங்கள்
சம்பளம் :
ரூ. 15,700 முதல் ரூ. 50,000/- வரை
கல்வித் தகுதி :
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு :
01.01.2020 அன்று 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா பொதுப்பிரிவினர் 30 வயது வரையும், BC, BC(M), MBC & DNC பிரிவினர் 32 வயது வரையும், SC/ST பிரிவினர், அனைத்து பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் 35 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வயது வரம்பில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளதும்
தேர்வு முறை :
நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://tnrd.gov.in/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://tnrd.gov.in/pdf/Download_Notification_and_Instruction.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.02.2021 மாலை 5.45 மணி வரை