8வது வகுப்பு தேர்ச்சியா? ரூ. 19,500+ சம்பளத்தில் வேலைவாய்ப்பு

சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் அலுவலகத்தில் காலியாக இருக்கும் வாகன ஓட்டுனர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: வாகன ஓட்டுனர் : 02 காலிப்பணியிடங்கள் கல்வித் தகுதி: 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கூடவே வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 5 வருடம் முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 01.07.2019 அன்று 30 வயதிற்குள்
 
TNRD Driver Jobs

சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் அலுவலகத்தில் காலியாக இருக்கும் வாகன ஓட்டுனர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

8வது வகுப்பு தேர்ச்சியா? ரூ. 19,500+ சம்பளத்தில் வேலைவாய்ப்பு

காலிப் பணியிடங்கள்:

வாகன ஓட்டுனர் : 02 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி:

8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கூடவே வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 5 வருடம் முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

01.07.2019 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

சம்பளம் :

ரூ. 19,500 முதல் 62,000 மற்றும் இதர படிகளும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை https://tnrd.gov.in/advertisement/Driver%20PDF%20APPLICATION%20FORM.pdf தறவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்திருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://tnrd.gov.in/advertisement/Driver%20PDF%20NOTIFICATION%202019.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முகவரி :
இயக்குநர்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம்,
4வது தளம், பனகல் மாளிகை,
சைதாப்பேட்டை, சென்னை – 15.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.10.2019 மாலை 5.45 மணி

From around the web