டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. குரூப் 1 தேர்வு உதவி மாவட்ட ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பணிகளுக்கு நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 181 குரூப் 1 பணியிடங்களுக்கு கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு சுமார் 9
 
TNPSC Group 1 Result Declared

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 1 தேர்வு உதவி மாவட்ட ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பணிகளுக்கு நடத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 181 குரூப் 1 பணியிடங்களுக்கு கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு சுமார் 9 ஆயிரத்துக்கு அதிகமானோர் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் அதிகாரபூர்வ இணையதளத்தில் http://www.tnpsc.gov.in பார்வையிடலாம்.

முதன்மைத் தேர்வு முடிவுகள் முதல்முறையாக குறுகிய காலத்திலே, அதாவது 145 நாட்களிலேயே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web