தமிழில் எழுத படிக்க தெரியுமா? ரூ. 15,700/- சம்பளத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 

 

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

ஓட்டுநர் - 05 காலிப்பணியிடங்கள்
அலுவலக உதவியாளர் - 10 காலிப்பணியிடங்கள்

tnhb job

சம்பளம் :

ஓட்டுநர் - ரூ. 19,500 முதல் 62,000/- வரை
அலுவலக உதவியாளர் - ரூ. 15,700 முதல் 50,000/- வரை

கல்வித் தகுதி :

ஓட்டுநர் :  

i) ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனம் இயக்குவதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். 
ii) கனரக வாகனம் உரிமம் பெற்று அனுபவம் பெற்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
iii) தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

அலுவலக உதவியாளர் : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

31.01.2021 அன்றைய தேதியின் படி, குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா பொதுப் பிரிவினர் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைபடி உச்ச வயது வரம்பில் சலுகையும் உண்டு. 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு / நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://tnhb.tn.gov.in/  ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://tnhb.tn.gov.in//posted_images/notification_pdf/post_32271_145.pdf  அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.02.2021

மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளைப் பெற telegram.me/careertm என்கிற டெலிகிராம் பக்கத்தில் இணையவும்.

From around the web