ரூ. 18,800/- சம்பளத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பணிக்கு 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. கோரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் விண்ணப்பத்தை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.  தற்போது இந்த வேலைவாய்ப்புக்கு 15.02.2021 முதல் 16.03.2021 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திலிருந்து அறிவிப்பு  வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Field Assistant : 2900 காலிப்பணியிடங்கள்

tneb field assistant job

சம்பளம் :

ரூ. 18,800 முதல் ரூ. 59,900/- வரை

கல்வித் தகுதி :

ITI (National Trade certificate/National Apprenticeship certificate) in Electrician (OR) Wireman (OR) Electrical Trade under Centre of Excellence Scheme முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

01.07.2019 அன்றைய தேதியின் படி, குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. வயது வரம்பு தளர்வு பற்றி தெரிந்துக்கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

விண்ணப்பக்கட்டணம் : 

OC / BC / MBC / DC - ரூ. 1000/-
SC/SCA/ST - ரூ. 500/-
ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் - ரூ. 500/-

தேர்வு முறை : 

ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://103.61.230.220/rect21/login.php ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க  வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.tangedco.gov.in/linkpdf/FA%20Notification.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.03.2021

புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://www.tangedco.gov.in/linkpdf/FA-Open-Close-Notification2021.pdf

From around the web