தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதால், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : 34 கணிணி இயக்குபவர் – 02 காலிப்பணியிடங்கள் வடிவமைப்பாளர் – 02 காலிப்பணியிடங்கள் தட்டச்சர் – 02 காலிப்பணியிடங்கள் தறி மேற்பார்வையாளர் – 02 காலிப்பணியிடங்கள் அலுவலக உதவியாளர் – 02 காலிப்பணியிடங்கள் அடை கட்டுபவர் – 03 காலிப்பணியிடங்கள்
 
tamilnadu handlooms and textiles recruitment

தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதால், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடங்கள் : 34

  • கணிணி இயக்குபவர் – 02 காலிப்பணியிடங்கள்
  • வடிவமைப்பாளர் – 02 காலிப்பணியிடங்கள்
  • தட்டச்சர் – 02 காலிப்பணியிடங்கள்
  • தறி மேற்பார்வையாளர் – 02 காலிப்பணியிடங்கள்
  • அலுவலக உதவியாளர் – 02 காலிப்பணியிடங்கள்
  • அடை கட்டுபவர் – 03 காலிப்பணியிடங்கள்
  • இளநிலை எழுத்தர் – 08 காலிப்பணியிடங்கள்
  • விற்பனையாளர் – 13 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :
ரூ. 4,000 முதல் 32,970 வரை சம்பளமாக கொடுக்கப்படும்.

கல்வித் தகுதி :

8-வது / 10-வது / டிப்ளமோ / டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறை படி வயது வரம்பில் சலுகைகள் கொடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை, துணை இயக்குநர் அலுவலகம், 824, கே.எஸ்.பார்த்தசாரதி தெரு, காமாட்சியம்மன் காலனி, ஓரிக்கை காஞ்சிபுரம் – 631 501 என்ற முகவரியில் வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://bit.ly/33BMDLp பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

கைத்தறி மற்றும் துணிநூல் துறை, துணை இயக்குநர் அலுவலகம்,
824, கே.எஸ்.பார்த்தசாரதி தெரு,
காமாட்சியம்மன் காலனி, ஓரிக்கை
காஞ்சிபுரம் – 631 501

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.12.2019 மாலை 5.45 மணி வரை

From around the web