சென்னை கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகளில் உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : 300 சங்கத்தின் பெயர்: தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை-1 பணி: உதவியாளர் – 176
 
Chennai Cooperative Bank Recruitment

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகளில் உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

சென்னை கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடங்கள் : 300

சங்கத்தின் பெயர்: தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை-1
பணி: உதவியாளர் – 176 காலிப்பணியிடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.18,800 – 56500

சங்கத்தின் பெயர்: தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சென்னை-4
பணி: உதவியாளர் – 57 காலிப்பணியிடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.13,000 – 45460

சங்கத்தின் பெயர்: தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம். சென்னை-18
பணி: உதவியாளர் – 58 காலிப்பணியிடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.15,000 – 62500

சங்கத்தின் பெயர்: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், சென்னை-10
பணி: இளநிலை உதவியாளர்- 06 காலிப்பணியிடங்கள்

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,8000

சங்கத்தின் பெயர்: தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், சென்னை-93
பணி: இளநிலை உதவியாளர் – 03 காலிப்பணியிடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000

கல்வித் தகுதி :

ஏதாவது ஒரு துறையில் பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01-07-2019 அன்றுள்ளபடி 18 முதல் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

விண்ணப்பக் கட்டணம் :

எஸ்சி, எஸ்டி பிரிவினர், அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ. 250/- விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் http://www.tncoopsrb.in/ மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.tncoopsrb.in/doc_pdf/Notification_1.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.02.2020

From around the web