தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின், தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக அடிப்படையில் பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள தஞ்சை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட தகுதியுடைய ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

உதவியாளர் - 72 காலிப்பணியிடங்கள்
பட்டியல் எழுத்தர் - 62 காலிப்பணியிடங்கள்
காவலர் - 51 காலிப்பணியிடங்கள்

thanjvur tncsc job

சம்பளம் :

உதவியாளர் - ரூ. 2,410 + ரூ. 4,049/- (அகவிலைப்படி)
பட்டியல் எழுத்தர் - ரூ. 2,359 + ரூ. 4,049/- (அகவிலைப்படி)
காவலர் - ரூ. 2,359 + ரூ. 4,049/- (அகவிலைப்படி)

கல்வித் தகுதி :

உதவியாளர் - +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பட்டியல் எழுத்தர் - பட்டம் பெற்றிருக்க வேண்டும்
காவலர் - 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு : 

01.07.2020 அன்றைய தேதியின்படி 18 முதல் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள  அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

thanjvur tncsc job

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.02.2021

From around the web