ரூ. 36,700/- சம்பளத்தில் தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தில் காலியாக உள்ள Assistant Engineer (Civil) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
Assistant Engineer (Civil) - 02 காலிப்பணியிடங்கள்
சம்பளம் :
ரூ. 36,700 முதல் ரூ. 1,16,200/- வரை
கல்வித் தகுதி :
பொறியியல் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் (சிவில்) மற்றும் தொழில் நுட்பம் (சிவில்) பிரிவில் முழு நேர படிப்பு மற்றும் முதல் வகுப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01.02.2021 அன்றைய தேதியின் படி, குறைந்தபட்சம் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பு / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு & சீர்மரபினர் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம், மாற்றுத்திறனாளிகள் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை :
நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.sipcot.tn.gov.in/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.sipcot.tn.gov.in/webroot/img/AE-civil.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.03.2021