ரூ. 35,150 முதல் ரூ. 50,900/- வரை சம்பளத்தில் இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 322 Officers Grade B பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
Officers in Grade 'B' (DR) - General - 270 காலிப்பணியிடங்கள்
Officers in Grade 'B' (DR) - DEPR - 29 காலிப்பணியிடங்கள்
Officers in Grade 'B' (DR) - DSIM - 23 காலிப்பணியிடங்கள்
சம்பளம் :
ரூ. 35,150 முதல் ரூ. 50,900/- வரை
கல்வித் தகுதி :
எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு :
01.01.2021 அன்றைய தேதியின்படி 21 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ. 850 செலுத்த வேண்டும், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ. 100 செலுத்த வேண்டும்.
தேர்வு முறை :
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.rbi.org.in அல்லது https://opportunities.rbi.org.in ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTGBDRB092851E3E1C4D219C54676FA642772E.PDF அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.02.2021