8ஆம் வகுப்பு தேர்ச்சியா? 15,700 சம்பளத்தில் மாவட்ட வருவாய் அலகில் வேலைவாய்ப்பு  

 

நீலகிரி மாவட்ட வருவாய் அலகில்  காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவுக்காவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

ஈப்பு ஓட்டுநர் - 04 காலிப்பணியிடங்கள்
இரவுக்காவலர் - 03 காலிப்பணியிடங்கள்

nilgiris district tnrd job

வயது வரம்பு : 

01.07.2020 அன்று குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும், அதிகபட்சமாக பொதுப்பிரிவினர் 30 வயது வரையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயது வரையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். 

கல்வித் தகுதி :

ஈப்பு ஓட்டுநர் - குறைந்த பட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக LMV Licence வைத்திருக்க வேண்டும். 

இரவுக்காவலர் - குறைந்த பட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம் : 

ரூ. 15,700 முதல் ரூ. 62,000/- வரை வழங்கப்படும். 

தேர்வு முறை : 

நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் நகல்களுடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பதிவு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள  https://nilgiris.nic.in/notice_category/recruitment/  அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.01.2021  

From around the web