ரூ. 17,000/- சம்பளத்தில் சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Data Entry Operator (Grade A) பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
Project Data Entry Operator (Grade A) - 11 காலிப்பணியிடங்கள்
சம்பளம் :
மாதம் ரூ. 17,000/- வழங்கப்படும்
வயது வரம்பு :
25 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகுதி :
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை :
நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://nie.gov.in அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 19.03.2021