8வது வகுப்பு தேர்ச்சியா? நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : அலுவலக உதவியாளர் : 37 காலிப்பணியிடங்கள் சம்பளம் : ரூ. 9,300 முதல் 35,150/- வரை கல்வித் தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 01-01-2020 அன்றுள்ளபடி 18
 
Namakkal District Cooperative Recruitment

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

8வது வகுப்பு தேர்ச்சியா? நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடங்கள் :

அலுவலக உதவியாளர் : 37 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :

ரூ. 9,300 முதல் 35,150/- வரை

கல்வித் தகுதி :

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01-01-2020 அன்றுள்ளபடி 18 முதல் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

விண்ணப்பக் கட்டணம் :

எஸ்சி, எஸ்டி பிரிவினர், அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ. 150/- விண்ணப்பக் கட்டணம் வரைவோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும்.

விண்ணப்பக் கட்டணத்தை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கங்களின் தலைமையகம் மற்றும் அதன் கிளைகள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் “NAMAKKAL DRB FOR COOPERATIVES” Payable at NAMAKKAL என்றபெயரில் வரைவோலையாக(Demand Draft) எடுக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பப் படிவத்தின் எண் மற்றும் விண்ணப்பிக்கப்படும் பதவிக்கான பெயர் மற்றும் விண்ணப்பதாரரின் பெயர் ஆகியவை வரைவோலையின் பின்புறம் எழுதப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அலுவலகங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பபடிவத்தை நிரப்பி, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://epaper.dinamani.com/c/47730619 பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2020 மாலை 5.45 மணி

From around the web