ரூ. 20,600 முதல் ரூ. 1,16,600/- வரை சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 

 

நாமக்கல் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Deputy Manager (System / Marketing) - 04 காலிப்பணியிடங்கள்
Executive (Office) - 04 காலிப்பணியிடங்கள்
Junior Executive (Office) - 03 காலிப்பணியிடங்கள்
Extension Officer Grade II - 03 காலிப்பணியிடங்கள்

namakkal aavin job

சம்பளம் :

ரூ. 20,600 முதல் ரூ. 1,16,600/- வரை. பதவிவாரியான சம்பள தகவலை அதிகார பூர்வ அறிவிப்பில் பார்வையிடவும். 

கல்வித் தகுதி :

எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு சில பதவிகளுக்கு கூட்டுறவு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும், மேலும் தகவலை தெரிந்துக்கொள்ள அதிகார பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

வயது வரம்பு : 

01.07.2020 அன்று 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா பொதுப்பிரிவினர் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம், SC/SCA/ST/MBC/DNC/BC பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.  

விண்ணப்பக்கட்டணம் :

OC/MBC/BC பிரிவினர் ரூ. 250 செலுத்த வேண்டும், SC/SCA/ST பிரிவினர் ரூ. 100 செலுத்த வேண்டும். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://bit.ly/3r6qMI1 விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் நகல் எடுத்து சுயசான்றொப்பம் இட்டு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://bit.ly/3r6qMI1 அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.02.2021

From around the web