ரூ. 3.75 லட்சம் சம்பளத்தில் NABARD வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 

 

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள பொறியாளர், கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

பொறியாளர், கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் - 04 காலிப்பணியிடங்கள்

nabard job

சம்பளம் :

ரூ.1,50,000 முதல் ரூ.3,75,000 வரை வழங்கப்படும் 

கல்வித் தகுதி :

இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், முதுநிலை டிப்ளமோ அல்லது பி.எச்டி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 

62 வயது வரை விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்பக் கட்டணம்  :

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ. 800/-
மற்ற பிரிவினர் - ரூ. 50/-

தேர்வு முறை : 

நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  https://ibpsonline.ibps.in/nabrsccfeb21/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/2602212705Advertisement%202021%20-%20Consultants.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.03.2021

From around the web