ரூ. 19,500 சம்பளத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள இளநிலை செயலர் மற்றும் விரிவாக்க அலுவலர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய எல்லைக்கு உட்பட்ட தகுதி வாய்ந்த பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க பணியாளர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
இளநிலை செயலர் (அலுவலகம்) - 02 காலிப்பணியிடங்கள்
விரிவாக்க அலுவலர் நிலை-2 - 08 காலிப்பணியிடங்கள்
சம்பளம் :
இளநிலை செயலர் (அலுவலகம்) - ரூ. 19,500 முதல் 62,000/- வரை
விரிவாக்க அலுவலர் நிலை-2 - ரூ. 20,600 முதல் 65,500/- வரை
கல்வித் தகுதி :
எதாவது ஒரு டிகிரி மற்றும் கூட்டுறவு பயிற்சி அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். முன் அனுபவமும் தேவை.
தேர்வு முறை :
Academic Qualification, Experience, Written Test & Oral Test மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://aavinmilk.com/documents/20142/0/MPCS%20application%20form-converted.pdf விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://aavinmilk.com/documents/20142/0/MPCS%20application%20form-converted.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.03.2021 மாலை 5.30 மணி வரை