8ஆம் வகுப்பு தேர்ச்சியா? தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடம் : அலுவலக உதவியாளர் : 03 காலிப்பணியிடங்கள் கல்வித் தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு : 01.08.2020 அன்று குறைந்தபட்சம் அனைத்து பிரிவினரும் 18 வயது நிறைவடைந்திருக்க
 
Krishnagiri District Office Assistant Jobs

கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

8ஆம் வகுப்பு தேர்ச்சியா? தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடம் :

அலுவலக உதவியாளர் : 03 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01.08.2020 அன்று குறைந்தபட்சம் அனைத்து பிரிவினரும் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பொதுப்பிரிவை சார்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிறப்டுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் ஆகியோர் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் அருந்ததியர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் :

ரூ. 15,700 முதல் ரூ. 50,000/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2020/02/2020021414.pdf விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2020/02/2020021414.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த நேர்காணல் கடிதம் தனியே அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),
அறை எண். 58, முதல் தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
கிருஷ்ணகிரி.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.03.2020 மாலை 5.45 மணிக்குள்

From around the web