கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் ஆய்வக உடனாள், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : ஆய்வக உடனாள் : 01 காலிப்பணியிடம் அலுவலக உதவியாளர் : 02 காலிப்பணியிடம் ஓட்டுநர் : 01 காலிப்பணியிடம் சம்பளம் : ஆய்வக உடனாள் : ரூ. 15,900 முதல் 50,400/- வரை அலுவலக உதவியாளர் : ரூ. 15,700 முதல்
 
Krishnagiri district ahd jobs

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் ஆய்வக உடனாள், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடங்கள் :

ஆய்வக உடனாள் : 01 காலிப்பணியிடம்
அலுவலக உதவியாளர் : 02 காலிப்பணியிடம்
ஓட்டுநர் : 01 காலிப்பணியிடம்

சம்பளம் :

ஆய்வக உடனாள் : ரூ. 15,900 முதல் 50,400/- வரை
அலுவலக உதவியாளர் : ரூ. 15,700 முதல் 50,000/- வரை
ஒட்டுநர் : ரூ. 19,500 முதல் 62,000/- வரை

கல்வித் தகுதி :

ஆய்வக உடனாள் : 10-ம் வகுப்பு தேர்வு எழுதி மதிப்பெண் பட்டியல் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் : 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
ஓட்டுநர் : 8-ம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும், ஊர்தி ஓட்டுவதில் குறைந்தபட்சம் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01-07-2019 அன்றுள்ளபடி 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

முக்கிய குறிப்பு : ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் அல்லது பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட மேற்பட்ட பொதுக் கல்வித் தகுதி அல்லது கல்லூரி பட்ட படிப்பு பெற்றிருந்தால் அதிகபட்சமாக 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை இலவசமாக சம்பந்தப்பட்ட கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலக பணி நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். தபால் மூலம் பெற விரும்புவோர் சுயவிலாசமிட்ட ரூ.5/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய உறையுடன் விண்ணப்பித்தும் பெற்றுக்கொள்ளலாம். அல்லது கட்டணமின்றி விண்ணப்ப படிவத்தை https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2019/12/2019120657.pdf பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2019/12/2019120657.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.12.2019 மாலை 5.45 மணி வரை

From around the web