BE/ B.Tech தேர்ச்சியா? மத்திய அரசு நிறுவனத்தில் 35000 சம்பளத்தில் வேலை!
 

மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Project Associate காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
BE/ B.Tech தேர்ச்சியா? மத்திய அரசு நிறுவனத்தில் 35000 சம்பளத்தில் வேலை!

பதவி:
மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Project Associate காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
PROJECT ASSOCIATE  – 02 காலியிடம்

வயது வரம்பு :
PROJECT ASSOCIATE    - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 35 ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- குறைந்தபட்சம்- ரூ. 25,000
அதிகபட்சம்- ரூ. 35,000

கல்வித்தகுதி: :
Project Associate – கல்வித் தகுதி எனக் கொண்டால் BE/ B.Tech - EEE/ ECE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NET/ GATE தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Project Associate – பணி அனுபவம் எனக் கொண்டால் 2 வருட பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
http://14.139.188.184:8080/req_temp/view.php?id=12507
என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அறிய:
http://14.139.188.184:8080/req_temp/view.php?id=12507
என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
26.04.2021

From around the web