ரூ. 19 ஆயிரம் முதல் ரூ. 23 ஆயிரம் சம்பளத்தில் மத்திய வனக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு

 
ரூ. 19 ஆயிரம் முதல் ரூ. 23 ஆயிரம் சம்பளத்தில் மத்திய வனக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு

மத்திய வனக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள Senior Project Fellow, Junior Project Fellow, Project Assistant பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Senior Project Fellow - 01 காலிப்பணியிடம்
Junior Project Fellow - 02 காலிப்பணியிடங்கள்
Project Assistant - 01 காலிப்பணியிடம்

icfre job

சம்பளம் :

Senior Project Fellow - ரூ. 23,000/- 
Junior Project Fellow - ரூ. 20,000/- 
Project Assistant - ரூ. 19,000/- 

கல்வித் தகுதி :

Senior Project Fellow – Paper Technology, Cellulose பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

Junior Project Fellow – உயிரியல் அல்லது வேதியியல் பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Project Assistant – உயிரியல் அல்லது வானவியல் பாடங்களில் B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 

01.06.2021 அன்றைய தேதியின் படி, குறைந்தபட்சம் 28 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா 32 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அசல் ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://icfre.gov.in/vacancy/vacancy475.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

நேர்காணல் நடைபெறும் தேதி : 24.03.2021 காலை 09.00 மணி

From around the web