பி.இ. பட்டதாரியா? ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான Hindustan Urvarak & Rasayan Limited (HURL) நிறுவனத்தில் பொறியாளர் பணியிடம் காலியா இருப்பதாகவும், இந்த காலிப்பணியிடன்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடம் : கெமிக்கல் இன்ஜனியர் – 38 காலிப்பணியிடங்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் – 25 காலிப்பணியிடங்கள் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் – 15 காலிப்பணியிடங்கள் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் – 12 காலிப்பணியிடங்கள் கல்வித்
 
HURL Recruitment

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான Hindustan Urvarak & Rasayan Limited (HURL) நிறுவனத்தில் பொறியாளர் பணியிடம் காலியா இருப்பதாகவும், இந்த காலிப்பணியிடன்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பி.இ. பட்டதாரியா? ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடம் :

கெமிக்கல் இன்ஜனியர் – 38 காலிப்பணியிடங்கள்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் – 25 காலிப்பணியிடங்கள்
எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் – 15 காலிப்பணியிடங்கள்
இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் – 12 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

அந்தந்த துறையில் பி.இ. அல்லது பி.டெக், அல்லது பி.எஸ்.சி -யில் இஞினியரிங் முடித்திருக்க வேண்டும். கூடவே 2019 கேட் தேர்வும் எழுதியிருக்க வேண்டும். முந்தைய கேட் தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

சம்பளம் :

ஆண்டுக்கு ரூபாய் 7 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://hurl.net.in/ அதிகாரபூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை தறவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களோடு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://hurl.net.in/uploads/advertisement_for_Fresh_Graduates_second.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.03.2020

From around the web