தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் அரசு வேலை!

திருநெல்வேலி மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறை தற்போது  மீன்வள உதவியாளர்‌ பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
   
 
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் அரசு வேலை!

திருநெல்வேலி மாவட்டத்தில்‌ மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறையில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர்‌ காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
திருநெல்வேலி மாவட்டத்தில்‌ மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறையில் தற்போது காலியாக உள்ள மீன்வள உதவியாளர்‌ காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
மீன்வள உதவியாளர்‌- 8 காலியிடம்

வயது வரம்பு :
மீன்வள உதவியாளர்‌- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 
குறைந்தபட்சம்-18
அதிகபட்சம்- 35

சம்பள விவரம்: 
சம்பளம் –  சம்பள விவரம் குறித்த விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கல்வித்தகுதி: :
மீன்வள உதவியாளர்‌– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக தமிழில்‌ எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
மீன்வள உதவியாளர்‌–  நீச்சல்‌, மீன்பிடிப்பு, வலை பின்னுதல்‌, அறுந்த வலைகளை பழுதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும்‌

தேர்வுமுறை :
நேர்காணல்‌ 

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குல் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மீன்‌வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறை உதவி இயக்குநர்‌, 
மணிமுத்தாறு 
 

From around the web