ட்ரைவிங்க் தெரிந்தால் 62000 சம்பளத்தில் அரசு வேலை!

சென்னை மீன்பிடித்துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர்‌ அலுவலக‌ம் ஊர்தி ஒட்டுநர்‌ பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
 
ட்ரைவிங்க் தெரிந்தால் 62000 சம்பளத்தில் அரசு வேலை!

சென்னை மீன்பிடித்துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர்‌ அலுவலகத்தில்‌ காலியாக உள்ள ஊர்தி ஒட்டுநர்‌ காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
சென்னை மீன்பிடித்துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர்‌ அலுவலகத்தில்‌ காலியாக உள்ள ஊர்தி ஒட்டுநர்‌ காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
ஊர்தி ஒட்டுநர்‌ – 02 காலியிடம்

வயது வரம்பு :
ஊர்தி ஒட்டுநர்‌  - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 35

சம்பள விவரம்: 
சம்பளம் – 
குறைந்த பட்சம்- ரூ.19500/-
அதிகபட்சம் ரூ.62,000/- 

கல்வித்தகுதி: :
ஊர்தி ஒட்டுநர்‌  – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 
ஊர்தி ஒட்டுநர்‌  –பணி அனுபவம் 3 ஆண்டுகள் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
02.09.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கீழ்க்கண்ட விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவும்.
செயற் பொறியாளர்,
மீன்பிடித் துறைமுகத் திட்ட கோட்டம்,
ஒருங்கிணைந்த கால்நடைப் பராமரிப்பு,
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக வளாகம்,
நந்தனம்,
சென்னை- 600 035

From around the web