ரூ. 32 ஆயிரம் சம்பளத்தில் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு 

 

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (GIC)-வில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் : 

உதவி மேலாளர் - 44 காலிப்பணியிடங்கள்

GIC Jobs

சம்பளம் :

ரூ. 32,795/- முதல் ரூ. 62,315/- வரை

கல்வித் தகுதி :

ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

குறைந்தபட்சம் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.gicofindia.com/images/pdf/DETAILED__ADVERTISEMENT_FOR_RECRUITMENT_OF_SCALE_I_OFFICERS_-_2021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.03.2021

From around the web