தமிழ்நாடு அரசு பட்டு கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அரசு பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: கணினி இயக்குனர் – 01 காலியிடம் வடிவமைப்பாளர் – 01 காலியிடம் இளநிலை எழுத்தர் – 08 காலியிடம் விற்பனையாளர் நிலை II – 15 காலியிடம் அலுவலக உதவியாளர் – 02 காலியிடம் கல்வித் தகுதி: 8-வது வகுப்பு,
 
Cooptex Jobs

தமிழக அரசு பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு பட்டு கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு

காலிப் பணியிடங்கள்:

  • கணினி இயக்குனர் – 01 காலியிடம்
  • வடிவமைப்பாளர் – 01 காலியிடம்
  • இளநிலை எழுத்தர் – 08 காலியிடம்
  • விற்பனையாளர் நிலை II – 15 காலியிடம்
  • அலுவலக உதவியாளர் – 02 காலியிடம்

கல்வித் தகுதி:

8-வது வகுப்பு, 10-வது வகுப்பு மற்றும் பி.எஸ்.சி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

  • கணினி இயக்குனர் & வடிவமைப்பாளர் – ரூ. 5,800 முதல் ரூ. 32,970 + ரூ. 1,500
  • இளநிலை எழுத்தர் & விற்பனையாளர் நிலை II – ரூ. 4,900 முதல் ரூ. 27,800 + ரூ. 1,200
  • அலுவலக உதவியாளர் – ரூ. 4,000 முதல் ரூ. 19,360 + ரூ. 900

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., இசட் 322, நெ 55 சன்னதி தெரு, திருபுவனம் – 612 103, தஞ்சாவூர் மாவட்டம் என்ற முகவரியில் சங்க வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் பதிவு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.dailyrecruitment.in/wp-content/uploads/2019/10/Coptex-Notification.jpg பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முகவரி :

திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., இசட் 322, நெ 55 சன்னதி தெரு, திருபுவனம் – 612 103, தஞ்சாவூர் மாவட்டம்

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 31.10.2019 மாலை 5.45 மணிக்குள்

From around the web