ஐஐடி மாணவிக்கு அடித்த அதிர்ஷ்டம்: ரூ.1.45 கோடியில் கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை

பொதுவாக ஐஐடியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அவர்கள் படித்து முடிக்கும் முன்னரே வேலை கிடைத்துவிடும் என்பது தெரிந்ததே. அந்த அளவுக்கு ஐஐடியில் கல்வித்தரம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் டெல்லி ஐஐடியில் படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை வேலை இல்லை என்ற பேச்சே எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லி ஐஐடியில் கம்ப்யூட்டர் பொறியியல் படித்து வரும் மாணவி ஒருவர் சமீபத்தில் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவுக்கு சென்றார். அதில் அவருக்கு முன்னணி நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது.
 

ஐஐடி மாணவிக்கு அடித்த அதிர்ஷ்டம்: ரூ.1.45 கோடியில் கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை

பொதுவாக ஐஐடியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அவர்கள் படித்து முடிக்கும் முன்னரே வேலை கிடைத்துவிடும் என்பது தெரிந்ததே. அந்த அளவுக்கு ஐஐடியில் கல்வித்தரம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் டெல்லி ஐஐடியில் படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை வேலை இல்லை என்ற பேச்சே எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லி ஐஐடியில் கம்ப்யூட்டர் பொறியியல் படித்து வரும் மாணவி ஒருவர் சமீபத்தில் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவுக்கு சென்றார்.

அதில் அவருக்கு முன்னணி நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. அவருடைய சம்பளம் வருடத்திற்கு 1.45 கோடி என்பது குறிப்பிடத்தக்கது

இதேபோல் அவருடன் படித்த இரண்டு மாணவர்கள் ஆண்டுக்கு 43 லட்சம் மற்றும் 45 லட்சம் சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்

அதுமட்டுமன்றி அதே கல்லூரியில் படித்த சுமார் 500 பேருக்கு மேல் உலகின் முன்னணி நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், அமேசான், ஃபேஸ்புக், அடோப், ரிலையன்ஸ், சாம்சங் உட்பட பல்வேறு நிறுவனங்களில் ஆகிய நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கல்லூரியை நிறைவு செய்ய உள்ள இந்த மாணவர்களுக்கு இப்பொழுதே வேலைக்கான அப்பாயின்மென்ட் ஆர்டர்கள் வழங்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது

From around the web