சென்னை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் / மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடம் : உதவியாளர் / இளநிலை உதவியாளர் : 320 காலிப்பணியிடங்கள் கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு
 
Chennai Coporation Bank Jobs

சென்னை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் / மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடம் :

உதவியாளர் / இளநிலை உதவியாளர் : 320 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி

வயது வரம்பு :

01.01.2020 அன்று குறைந்தபட்சம் அனைத்து பிரிவினரும் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பொதுப்பிரிவை சார்ந்தவர்கள் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) மற்றும் இந்த வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர்கள், மாற்று திறனாளிகள், அனைத்து பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. பொது பிரிவை சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் 48 வயது வரை விண்ணப்பிக்கலாம். பொது பிரிவை சார்ந்த மாற்று திறனாளிகள் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

ரூ. 5,000/- முதல் 47,600/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.chndrb.in/ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.chndrb.in/doc_pdf/Notification_1.pdf மற்றும் http://www.chndrb.in/doc_pdf/Notification_2.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.02.2020 மாலை 5.45 மணிக்குள்

From around the web